Advertisment

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Incident happened to the woman who ate chicken with mayonnaise

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் மூணுபிடிகை எனும் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி இந்த உணவகத்தில் உணவு அருந்திய சுமார் 187 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

Advertisment

உணவகத்தில் உணவு அருந்திய 150க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்படைந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ‘குழிமந்தி’ சிக்கன் பிரியாணி சாப்பிட்ட அவர்கள், பிரியாணியுடன் மயோனைசை சாப்பிட்டதால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத்தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு சீல் வைத்து அடைத்தனர்.

Advertisment

இந்த நிலையில், சிக்கன் பிரியாணியை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்டவர்களில், ஒருவரான உசைபா (56) என்ற பெண் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உசைபா இன்று (28-05-24) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களும்தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சூர் பகுதியில் பெரும்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe