Incident happened to a woman with her face burnt in west bengal

Advertisment

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டம், கிருஷ்ணாநகர் பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் கருகிய நிலையில் பெண்ணின் உடல் ஒன்று இருந்தது. இதனை கண்டு, அதிர்ச்சியடைந்த நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மக்கள் உடனடியாக இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடையாளம் தெரியாத பெண் யார் குறித்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி என்பது தெரியவந்தது. உடனடியாக, அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, மாணவியின் குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து காணவில்லை. இது குறுத்து, மாணவியின் காதலரானராகுல் போஸை பலமுறை தொடர்பு கொண்டாலும், அவரது நடவடிக்கைகள் மற்றும் பதில்கள் அனைத்து குடும்பத்தினருக்கு சந்தேகத்திற்குரியதாக இருந்ததாகக்கூறப்பட்டது. மாணவியின் குடும்பத்தினர் கொடுத்த தகவலின்படி, மாணவியின் காதலரான ராகுல் போஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் வேறொரு இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், அவரது உடலை அந்தப் பகுதியில் வீசுவதற்கு முன்பு அவரது முகத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.