Advertisment

பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கோயிலில் நடந்த பகீர் சம்பவம்!

Incident happened to a woman in assam

அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் இந்து கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் டிசம்பர் வரை திருவிழா நடைபெறும். இந்த கோயில் அருகே, ஒரு பெண்ணை 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீடியோவில் காணப்படும் 9 நபர்களின் முகத்தை அடையாளம் கண்டனர்.

Advertisment

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார்,கவுகாத்தி பகுதியில் இருந்த சம்பந்தப்பட்ட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில், ஒரு நபர், பாதிக்கப்பட்ட பெண்ணை கோயில் திருவிழாவுக்காக அழைத்து வந்துள்ளார். இதனை குடிபோதையிலும், போதைப் பழக்கத்திலும் இருந்த 9 பேர், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த கும்பலில் இருந்த ஒருவர், அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து, கைது செய்யப்பட்ட குல்தீப் நாத், பிஜாய் ரபா, பிங்கு தாஸ், கஹன் தாஸ், சவ்ரவ் போரோ, மிரினால் ரபா, தியாபங்கர் முகியா ஆகிய 18- 23 வரை வயதான 7 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 2 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கோயிலில் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Assam incident Investigation
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe