Incident happened to Transgender leader in andhra pradesh

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் திருநங்கையான ஹாசினி. இவர் பிரபல திருநங்கை சமூகத்தின் தலைவியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கொடவலூர் மண்டலம் தபதோப்பு என்ற இடத்தில் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், திருநங்கை ஹாசினி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கை தலைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நெல்லூர், தமிழ்நாடு, திருப்பதி, விஜயவாடா மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட ஏராளமான திருநங்கை மருத்துவமனையில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

ஏராளமான திருநங்கைகள் அங்கு குவிந்திருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை, திருநங்கை சமூகத்திற்கு உறுதியளித்துள்ளது. இந்த கொலைக்கு திருநங்கைகளுக்கு இடையே நிலவும் அதிகார மோதல் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரித்து வருகின்றனர்.