10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை!

Incident happened to10-year-old boy by his Teacher

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரைச் சேர்ந்தவர் 10 வயது சிறுவன். இவர், பெங்களூருவில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை ஒருவர், சிறுவனை விருந்தினர் அறைக்கு அழைத்து பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால், தாயையும் தந்தையும் கொன்று விடுவதாக சிறுவனை அந்த ஆசிரியை மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த அந்த சிறுவன் தைரியத்தை வரவழைத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தானே பகுதியில் வசிக்கும் பெற்றோர், அங்குள்ள காவல்துறையை அணுகி புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில், அந்த ஆசிரியை மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident Maharashtra police teacher
இதையும் படியுங்கள்
Subscribe