
தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேஷ் மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜ்(17) . இவர் அங்குள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு, பங்கஜ்ஜின் அத்தை சாப்பிட அழைத்த போது, அவர் இருந்த அறையின் கதவை திறக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த அவருடைய அத்தை, பங்கஜுக்கு போன் செய்துள்ளார்.
அவர் எடுக்காததால் பதற்றமடைந்த, வீட்டில் இருந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து அறை கதவை உடைத்தனர். அப்போது, அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, சம்பவ நடந்த இடத்தில் தற்கொலை முயற்ச்சிக்கான காரணம் அறிந்து கொள்ள உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த மாணவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியே உலுக்கியுள்ளது.