Incident happened in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவேந்திர சாண்டல். இவர், கோட்டா நகரில் உள்ள கிடங்கு நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி டீனாவுக்கு இருதய நோய் இருந்ததால், அவரை கவனித்து கொள்வதற்காக ஓய்வு காலத்திற்கு முன்பாக ஓய்வு பெற முடிவு செய்து ஓய்வு பெற்றார்.

Advertisment

அதன்படி, சாண்டல் ஓய்வு பெற்ற நாளில் அவருடைய அலுவலகத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, மனைவி மற்றும் நண்பர்களோடு சாண்டல் அங்கு சென்றார். அங்கு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, டீனாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாண்டல், தனது மனைவி டீனாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisment

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், டீனா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். உடல்நிலை சரியில்லாத மனைவியை கவனித்துக் கொள்வதற்காக முன்பே ஓய்வு பெற முடிவு செய்திருந்த நிலையில், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.