Incident happened to nurse and putting chili powder on the private part in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், ஜலான் பகுதியை சேர்ந்த ஒரு பெண் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், இன்று காலை அந்த பெண் தனது ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை, நான்கு பேர் வழிமறித்து அங்குள்ள புதருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த பெண்ணை இரண்டு நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நான்கு பேரில் அடுத்த இரண்டு பேர் அந்த பெண்ணை கடுமையாக அடித்து அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள் மற்றும் குச்சியை உள்ளே வைத்துள்ளனர்.

Advertisment

இதில் படுகாயமடைந்த அந்த பெண், தனக்கு நடந்த கொடுமைகளை தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.