Incident happened to new married couple in madhya pradesh

Advertisment

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புதுமண தம்பதியினர், ரேவா மாவட்டத்தில் பைரவ் பாவா கோயிலுக்கு கடந்த 21ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் மது போதையில் இருந்த 8 பேர், தம்பதியரைச் சுற்று வளைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதையடுத்து, பெண்ணின் கணவரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து தாக்கி தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பிறகு, அந்த 19 வயது பெண்ணை அவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனையும் வீடியோ எடுத்துள்ளனர். இதில், அந்த பெண் படுகாயமடைந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடோ அல்லது வேறு யாரிடமோ சொன்னால், வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம் என்று அந்த கொடூர கும்பல் மிரட்டியுள்ளனர்.

இதில், பயந்துபோன தம்பதியினர், காவல்துறையினரிடம் புகார் எதுவும் அளிக்காமல் இருந்துள்ளனர். இருந்தபோதிலும், தைரியத்தை வரவழைத்த தம்பதி கடந்த 23ஆம் தேதி இது குறித்து போலீசிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், சந்தேகத்திற்கிடமான 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.