
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அமன். வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட இவர், ஹரியானாவில் உள்ள அம்பாலா நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்தார். அப்போது, நீதிமன்ற வாளகத்திற்கு அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் ஒரு கருப்பு நிற வாகனத்தில் வந்து, அமன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்திய பின்பு, அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிஐடி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகில் உள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னால், பழைய பகை இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.