Advertisment

ஒரு வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய்; பதற வைத்த சம்பவம்!

Incident happened in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், உமாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சகுன் யாதவ் (26). இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், சகுன் யாதவும் அவரது ஒரு வயது பெண் குழந்தையும் கிணற்றில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனர்.

Advertisment

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த கிராமத்தினர், கிணற்றில் குதித்து இரண்டு பேரின் உடலையும் மீட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரண்டு பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சகுன் யாதவை அவரது கணவரும், மாமியாரும் தொடர்ந்து துன்புறுத்தியதால் மனமுடைந்து தனது ஒரு பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சகுன் யாதவின் கணவரிடம் மாமியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Investigation incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe