incident happened on madhya pradesh woman

Advertisment

மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபிலேஷ் ஷர்மா. இவர், தன்னை ஒரு ராணுவ வீரர் என்று சொல்லி ஃபேஸ்புக் மூலம் ஒரு பெண்ணிடம் அறிமுகமாகி பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இவர்களது இருவருடைய பழக்கம், நாளடைவில் காதலாக மாறி காலம் இப்படியே சென்றுள்ளது.

இதற்கிடையில், கபிலேஷ் ஷர்மா ராணுவத்தில் பணியாற்றவில்லை என்பதையும், அவர் ஒரு தனியார் விடுதியில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார் என்பதையும் அந்த கண்டுபிடித்துள்ளார். இதனால் அந்த பெண், கபிலேஷ் ஷர்மாவினுடான காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கபிலேஷ் ஷர்மா, அந்த பெண்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் வைத்துக்கொண்டு அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார்.

இதில் மனமுடைந்த அந்த பெண், தனக்கு நடந்த கொடுமைகள் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி கபிலேஷ் ஷர்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.