Advertisment

காதலனை நம்பிச் சென்ற மாணவி; கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

Incident Happened to Law college students in andhra pradesh

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவி. இவர், வம்சி என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதியன்று வம்சி, தனது காதலியை கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

அப்போது, இருவருடைய அந்தரங்க காட்சிகளை வம்சி உதவியுடன் அவரது நண்பர்கள், தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். வம்சி உதவியுடன் நண்பர்கள் மூன்று பேர், அந்த வீடியோவை மாணவியிடம் காட்டி மிரட்டி தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பல மாத துன்புறுத்தலுக்கு பிறகு, மன உளைச்சல் அடைந்த மாணவி நேற்று முன் தினம் தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, மாணவியின் தந்தை அவரை காப்பாற்றி விசாரித்துள்ளார்.

Advertisment

அதன் பின்னர், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தந்தையிடம் பகிர்ந்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வம்சி மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனை நம்பிச் சென்ற மாணவியை, நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Investigation incident
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe