/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rape case ni_22.jpg)
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிழிந்த ஆடைகளுடன் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கன்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டம் ஜகன்னாத்பூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, நேற்று முன்தினம் கிழிந்த ஆடைகளுடன் அங்கன்வாடி மையம் அருகே கிடந்தார். மயக்கமான நிலையில் இருந்த அவரை கண்ட அப்பகுதி மக்கள், மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மர்மநபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டுபிடித்து சிறுமியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபரை, அப்பகுதி மக்கள் கண்டுபிடித்து, கடுமையாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Follow Us