Advertisment

 ஆட்டுக்கறி வாங்க பணம் கேட்ட கணவன்; வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்!

a incident happened  husband asked for money to buy mutton in UP

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டம் ஹதுடா பகுதியைச் சேர்ந்தவர் சத்பால் (45). இவருக்கு காயத்ரி தேவி என்ற மனைவி உள்ளார். தம்பதி இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி அடிக்கடி வாக்குவாதம் நிலவி வரும். மேலும், சத்பால் தனது மனைவியை அவ்வப்போது அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று ஆட்டுக்கறி வாங்குவதற்காக சத்பால் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், சத்பாலுக்கு காயத்ரி தேவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே எப்போதும் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதில், சத்பால் தனது மனைவியைக் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காயத்ரி தேவி அருகே இருந்த செங்கல் கற்களால் கணவனின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், சத்பால் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இந்த சம்பவத்தை அருகில் உள்ளவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சத்பாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவனை செங்கற் கற்களால் கொன்ற காயத்ரி தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டுக்கறி வாங்க பணம் கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால், கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe