Incident happened in gujarat

குஜராத் மாநிலத்தில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில், தங்கிருந்த தனது காதலி மயக்கமடைந்திருப்பதாக கூறி காதலர் ஒருவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அந்த இளம்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Advertisment

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையில், அந்த இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக போலீசாருக்கு தெரியவந்தது.

Advertisment

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், நர்ஸிங் பட்டதாரியான அந்த இளம்பெண் தனது காதலனுடன் நவ்சாரி ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று அவர்கள், உடலுறவில் ஈடுபட்ட போது இளம்பெண்ணுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறியிருக்கிறது. இதனை கண்ட காதலன், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முயற்சி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், ரத்தப்போக்கு அதிகமாகி அந்த பெண் மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார். இதில் பதற்றமடைந்த காதலன், தனது நண்பர் ஒருவரை அழைத்து அவரது உதவியுடன் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து. காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment