/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rape case ni_4.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்; இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், ‘ தான் வழக்கம் போல், கல்லூரிக்கு செல்வதற்காக ஆட்டோவில் பயணித்த போது, தனது பக்கத்து வீட்டுக்காரர் இம்ரான்கான் என்பவரும், அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் ஆட்டோவில் ஏறினர். பின்பு இம்ரான்கான், ஆட்டோ டிரைவரிடம் வழியை மாற்றிச் சொல்லி, வலுக்கட்டாயமாக தன்னை ஒரு அறைக்கு இழுத்துச் சென்றார். அதன் பின்னர், அந்த அறையில் வைத்து இம்ரான்கான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதற்கிடையில், அந்த நபரும், ஆட்டோ டிரைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், இம்ரான்கான் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், ஆட்டோ டிரைவர் மீதும் அடையாளம் தெரியாத நபர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி செல்வதற்காக ஆட்டோவில் பயணித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us