Incident Happened to College girl at odisha

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது பெண். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், தசரா பண்டிகை சமயத்தின் போது, இவருடைய பிறந்தநாள் தேதி வந்துள்ளது. தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனது ஆண் நண்பர் ஒருவருடன் புரிகாட் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு இந்த பெண் சென்றுள்ளார்.

Advertisment

அங்கு சென்ற ஆண் நண்பர், அந்த உணவகத்தின் உரிமையாளருடன் சேர்ந்து இந்த பெண்ணை தவறான முறையில் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோ இந்த பெண்ணிடம் காட்டி மிரட்டியுள்ளார். இதையடுத்து, ஆண் நண்பர், உணவக உரிமையாளர், ஒரு சிறுவன் மற்றும் 3 பேர் என மொத்தம் 6 பேர், இந்த பெண்ணை பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Advertisment

இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பாதம்படி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஆண் நண்பருடன் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.