Incident happened in bangalore

கர்நாடகா மாநிலம், பெங்களூர் வயலிக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (26). இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார். இந்த நிலையில், அவர் இருந்த வீட்டில் இருந்து 2 நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து மகாலட்சுமியின் தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் மகாலட்சுமியின் தாயாரும், சகோதரியும் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கிருந்த பிரிட்ஜில் மகாலட்சுமியின் உடல் துண்டு துண்டாக, வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

30 துண்டுகளாக உடல் வெட்டப் பட்டிருப்பதாக கூறப்பட்ட இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உடல் துண்டுகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த மகாலட்சுமி, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த கொலைச் சம்பவம் 2 முதல் 3 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து, குற்றவாளியை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Advertisment

மகாலட்சுமியுடன் பழகி வந்த அஷ்ரப் மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், மகாலட்சுமியின் செல்போனை சோதனை செய்தும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 30 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம், நாட்டையே உலுக்கியுள்ளது.