ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டிகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது உறவினர் ஒருவர், மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி வீட்டில் இருந்து சிறுமியை அழைத்துச் சென்று அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்குள் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அவ்வழியாக சென்ற சிலர், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.