Incident happened on 6 years girl in telangana

Advertisment

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தைச்சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் நேற்று இரவு அங்குள்ள அரிசிஆலைக்கு வெளியே தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான பால்ராம் என்பவர் சிறுமியைக் கடத்தி சென்று அருகே உள்ள முட்புதரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

திடீரென்று நள்ளிரவில் சிறுமியின் தாயார் கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது, அவரது மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்களை உதவிக்காக அழைத்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், தாயுடன் சேர்ந்து சிறுமியைத்தேடி வந்துள்ளனர். அப்போது, அங்குள்ள முட்புதர் ஒன்றில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர். மேலும் அப்பகுதி மக்கள், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பால்ராமை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில், பால்ராம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த போது, அதில் பால்ராம் சிறுமியைத்தோளில் சுமந்துகொண்டு அருகில் உள்ள முட்புதருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.