A Incident happened of a 5-year-old boy in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 5 வயது சிறுவன். இவரது உடலில் காயங்கள் ஏற்பட்டு உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. இதனால், சிறுவனின் குடும்பத்தினர் நடந்தவற்றை கூறும்படி அவனிடம் விசாரித்தனர்.

Advertisment

அவன் சொன்ன தகவல்படி, அவனது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், ‘அர்ஷ் மற்றும் ஜூனைத் ஆகிய இரண்டு பேர், சிறுவனை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று அருகில் உள்ள பண்ணையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை பண்ணையில் இருந்த ஆடு மேய்ப்பவர்களான ரிஸ்வான் மற்றும் அல்பேஸ் ஆகிய இரண்டு பேர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கச் சென்ற போது குற்றவாளிகள் தங்களை தாக்கியும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி தப்பிச் சென்றுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். 5 வயது சிறுவனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.