incident happened 3-year-old child thrown under a bridge uttar pradesh

3 வயது பெண் குழந்தையை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மெட்ரோ பாலத்தின் கீழே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள சந்தாநகர் மெட்ரோ நிலையம் அருகே 3 வயது பெண் குழந்தை தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை குழந்தை காணாமல் போனார். குழந்தையை பெற்றோரால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், அப்பகுதி மக்கள் குழந்தையைத் தேடத் தொடங்கியுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, மெட்ரோ பாலத்தின் கீழ் மயக்க நிலையில் கிடந்த குழந்தையை கண்டுபிடித்தனர்.

Advertisment

உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வழகுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடவியியல் நிபணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தையைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் குழந்தை, தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.