Advertisment

காதலனை சந்திக்கச் சென்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Incident happened to 16 old year girl in andhra pradesh

Advertisment

ஆந்திரப் பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டம் புத்வேலி அருகே விவசாயிகள் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், பதற்றமடைந்த விவசாயிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்க்கையில், தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண் அலறி துடித்துள்ளார். உடனடியாக, அந்த பெண்ணை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார், சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில், பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த 16 வயதான இவரும், விக்னேஷ் என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், விக்னேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனாலும், தனது பழைய காதலை தொடர வேண்டும் என்ற எண்ணிய விக்னேஷ், மாணவியை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று அழைத்துள்ளார். அதற்கு அந்த மாணவி மறுக்கவே, தற்கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டவும் செய்துள்ளார். இதில் பயந்துபோன மாணவி, அதற்கு சம்மதித்து விக்னேஷ் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற விக்னேஷ், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், மாணவியின் உடலில் தீ வைத்து எரித்து அங்கிருந்து தப்பியோடியதாக போலீசாரிடம் மாணவி வாக்குமூலம் கொடுத்தார்.

இதையடுத்து, சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகி இருக்கும் விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

incident
இதையும் படியுங்கள்
Subscribe