Skip to main content

மாற்று கட்சிக்கு வாக்களிக்கவிருக்கும் ராகுல்காந்தி குடும்பம்; தேர்தலில் ருசிகர சம்பவம்!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
incident in the election on Rahul Gandhi family to vote for alternative party

மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25-05-24) 7 மணியளவில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

அதன்படி, பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 15 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. 

இதில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைந்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டுள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதுவரை, காங்கிரஸ் சின்னமான கை சின்னத்துக்கு வாக்களித்து வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இன்று ஆம் ஆத்மி சின்னமான துடைப்பம் சின்னத்துக்கு வாக்களிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போல், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், துடைப்பம் சின்னத்துக்குப் பதிலாக, கை சின்னத்துக்கு வாக்களிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் புதுடெல்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார்கள். புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி வேட்பாளராக சோம்நாத் பாரதி போட்டியிடுகிறார். அதனால், இன்று நடைபெற்று வரும் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆம் ஆத்மி சின்னமான துடைப்பம் சின்னத்துக்கு வாக்களிக்க உள்ளனர். அதே போல், சாந்தினி சவுக் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்காக கை சின்னத்தில் வாக்களிக்கவுள்ளார். இது டெல்லி அரசியலில் ருசிகரமாகப் பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்