he incident done by the villagers for the little girl lying in the pond in west bengal

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தார் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அலிபுர்தார் மாவட்டத்திற்குட்பட்ட கிராமமான பலகட்டா பகுதியில் உள்ள மக்கள், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை மரத்தில் கட்டி வைத்து தாக்குவதாக அந்த போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

Advertisment

அந்த தகவலின் பேரில், போலீசார் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், அந்த கிராம மக்கள், போலீசாரை உள்ளே நுழைய விடாமல் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால், அங்கு அதிக அளவிலான போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டம் கலைக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், அவர்கள் செல்வதற்குள், கிராமத்தினரால் தாக்கப்பட்ட அந்த நபர் உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisment

அந்த விசாரணையில், பலகட்டா கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி நேற்று மாலை முதல் காணாமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோர் கிராமம் முழுக்க சிறுமியை தேடி வந்தனர். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த மோனா ராய் என்ற நபருடன் சிறுமியை கடைசியாக பார்த்ததாக, சிலர் கூறிதன் பேரில் சிறுமியின் உறவினர்கள் மோனா ராயின் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த படுக்கையில் ரத்தக்கறை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில், சிறுமியின் உடல் கிராமத்தின் அருகே உள்ள குளத்தில் மிதந்து கொண்டிருந்ததை கிராமத்தினர் கண்டுபிடித்தனர். சிறுமியை, மோனா ராய் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அங்குள்ள ஒரு மரத்தில் அவரை கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் உடலையும், மோனா ராய்யின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், பக்தா ராய் என்ற நபர், சிறுமி கொலையில் தனக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் அவர், கிராம மக்கள் தன்னையும் அடித்து கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் சரணடைந்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment