incident in delhi court

Advertisment

நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான ரவுடி உட்பட 4 பேர் நீதிபதி முன்பேசுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோஹிணிகீழமை நீதிமன்றத்தில் வழக்கொன்றின் விசாரணைக்காக ரவுடி ஜிஜேந்தர் கோகி என்பவரை போலீசார் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்தனர். நீதிபதி அறை 217இல் நீதிபதி ககன்தீப் சிங் முன்னிலையில் ரவுடிஜிஜேந்தர் கோகி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜிஜேந்தர் கோகியின்எதிர்தரப்பினர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் ரவுடி ஜிஜேந்தர் கோகி சுட்டுக்கொல்லப்பட்டடார். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில்ஈடுபட்டவர்களை எதிர்த்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவிவருகிறது. போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டமூன்று பேரில்இருவர் வழக்கறிஞர் உடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் நான்காவது முறையாக டெல்லி ரோஹிணிகீழமை நீதிமன்றத்தில் துப்பாக்கிசூடுநடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.