Advertisment

வாங்கிய காருக்கான தொகையை கேட்டதற்கு காரை ஏற்றி கொலை ; வெளியான பகீர் வீடியோ 

The incident of the car after asking for the amount for the purchased car; Released video

Advertisment

பெங்களூருவில் இளைஞர் ஒருவரை வேண்டுமென்றே, நபர் ஒருவர் காரை ஏற்றிக் கொல்லும் பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

பெங்களூரில் புலிகேசி நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த 18ஆம்தேதி இரவு அஸ்கர் என்ற நபர் அமீர் என்ற நபரைஸ்கார்பியோ காரை ஏற்றி கொலை செய்துள்ளார். கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்கையில், அஸ்கர் புலிகேசி நகரில் 'யூஸ்டு கார்' என்ற பெயரில் ஒரு கார் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

அந்த கடையில் அமீர் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கி உள்ளார். ஆனால் காருக்கான முழு தொகையை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மீதத்தொகையை அஸ்கர் பலமுறை கேட்டும் அமீர் கொடுக்காததால், அஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து உடனடியாக பணத்தை கொடுக்கும்படி அமீரை எச்சரித்தனர். ஆனாலும் அமீர் பணத்தை கொடுக்கவில்லை. இது தொடர்பாக அஸ்கருக்கும் அமீருக்கும் மோதல் வெடித்தது.

Advertisment

இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவுஸ்கார்பியோ காரில் பின் தொடர்ந்து சென்ற அமீர், அஸ்கர்மீது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். முதலில் போலீசார் இந்த சம்பவம் சாலை விபத்து என வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. குறுக்கும் மறுக்கமாக தப்பித்து ஓட நினைத்த அஸ்கரை காரை வளைத்து வளைத்துவந்து அமீர் காரை ஏற்றி கொலை செய்தது தெள்ளத்தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமீரையும் அவருடைய நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

police Bengaluru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe