பேருந்தில் தன்னிடம் அத்துமீறிய நபரை இளம்பெண் தனி ஒரு ஆளாக தட்டிக்கேட்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பதிஞாருதுறையில் இருந்து வெங்கனபள்ளி என்ற பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் சந்தியா என்ற பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அப்பெண்ணிடம் தவறாக சைகை காட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நபர் சந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பேருந்தில் இருந்த மற்றவர்களும் கண்டுகொள்ளாத நிலையில் ஒருகட்டத்தில் பொறுக்கமுடியாத அந்த பெண் பேருந்திலிருந்து அந்த நபரை கீழே இறக்கி தட்டிகட்கும் வகையில் தாக்கியுள்ளார். இந்த காட்சிகளை சிலர் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.