Advertisment

பாம்பிற்கு ராக்கி கட்டிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

incident in bihar

ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படும்.சகோதரத்துவ பாசத்தை உணர்த்தக்கூடிய ஒன்றாக ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களில்இது வெகுவாக கொண்டாடப்படும்.சகோதரனாக ஏற்றுக் கொண்ட ஆண்களுக்கு, பெண்கள் திலகமிட்டு, இனிப்பு வழங்கி தங்களது சகோதரத்துவ அன்பை பகிர்ந்து கொள்வது இந்த கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

Advertisment

bihar

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமைவட மாநிலங்களில் இந்த பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பாம்புக்கு ராக்கி கட்டிய சம்பவத்தில் இளைஞர்ஒருவர் உயிரிழந்த சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகாரை சேர்ந்த சரண் என்ற இளைஞர் அவர் வளர்ந்து வந்த இரண்டுநாக பாம்புகளுக்கு அவரது சகோதரிகளைவைத்து ராக்கி கட்டியுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக சீறிப்பாய்ந்த பாம்பு, சரணை கடித்தது. இந்த சம்பவத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சரண், இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாம்பிற்கு ராக்கி கட்டும் அந்த வீடியோ தற்போதுசமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisment

Bihar incident Raksha Bandhan video
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe