/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/afdsfwrwr_0.jpg)
யோகா பயிற்றுநரானபாபா ராம்தேவ் யானையின் மீதிருந்துகீழே விழுந்து காயமடைந்த சம்பவம் தொடர்பான காணொலி வெளியாகியுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவருபவரும்,யோகா ஆசிரியருமான பாபா ராம்தேவ் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் யானையின் மீது அமர்ந்து யோகா செய்துள்ளார். சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்த யானை திடீரெனசற்று நகர்ந்ததால் மேல் அமர்ந்திருந்த பாபா ராம்தேவ் தடுமாறி கீழே விழுந்தார்.
கீழே விழுந்த அவரை உடனடியாக எழுந்து நின்ற போதிலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்குமுதுகு தண்டுவடத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பான காணொலிவெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)