தெலுங்கா மாநிலத்தில் மருத்துவர் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டபோது, 4 பேர் இணைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து வீசியது தெலுங்கானாவை பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடு முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் 26 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் ஒரு வயது குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

incident in andra

Advertisment

Advertisment

பிரகாசம் மாவட்டத்தில் உள்ள லிங்ககுண்டா கிராமத்தின் சாலையோரத்தில் டிசம்பர் 4ந்தேதி விடியற்காலை எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல், அருகில் குழந்தையின் உடல் இருப்பதை பார்த்து அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிள்ளனர்.

அவர்கள் சம்பவயிடம் வந்து பெண் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒரு வயது குழந்தையின் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.

கொலை செய்தபின் இரு உடல்களையும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பாதி மட்டும்மே அந்த உடல் எரிந்துள்ளது. கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.