Skip to main content

விழாக்கோலம் பூண்ட அயோத்தி; ராமர் கோவில் குடமுழுக்கு!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Inauguration of Ram temple in Ayodhya

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 

தென் மாநிலமான கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரானைட் கற்களும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணலைக் கொண்டு கோவிலின் அடித்தள அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானத்தில் துளி அளவு கூட இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணமாகப் பொதுவாக இரும்பின் ஆயுட்காலம் 90 ஆண்டுகள் மட்டுமே; ஆனால் ராமர் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் எந்த வித இயற்கை பேரிடர்களிலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக உருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கட்டுமானத்தில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கட்டுமானத்தில் சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்தாமல் கற்களோடு கற்களை இணைக்கும் இண்டர்லாக் முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 3 தளங்கள், 161 அடி உயர கோபுரத்துடன் கட்ட திட்டமிடப்பட்ட ராமர் கோவிலின் 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறவுள்ளது. பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவால் அயோத்தி நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. ராமர் கோயில் வண்ண பூக்களினாலும், மின் விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மதியம் 12.05 மணி முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக அயோத்தி நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை காலம்... அயோத்தி ராமருக்கு பருத்தி ஆடை!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Cotton clothes for Ayodhya Ram

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ராமர் சிலைக்கு பருத்தி ஆடை அணிவிக்கப்படும் என ராம ஜென்மபூமி தீர்த்த  சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது. கோடை காலத்தையொட்டி அயோத்தி ராமர் சிலைக்கு இன்று முதல் பருத்தி ஆடை அணிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வண்ணம் பூசப்பட்ட கைகளால் நெய்த ஆடைகளை ராமருக்கு அணுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், கோடை காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.

Next Story

‘அயோத்தி ராமருக்கு ஒரு மணி நேரம் ரெஸ்ட்’ - அறக்கட்டளை அதிரடி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 Trust Management announced Ayodhi Ram needs an hour every day

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது, “ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12:30 முதல் 1:30 வரை மூடவுள்ளோம். அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.