இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய ஐஎன்எஸ் 'விராட்' போர் கப்பல் இன்றுடன் தனது கடைசி பயணத்தை நிறைவு செய்கிறது. மும்பையிலிருந்து குஜராத்தின் அலங் கப்பல் உடைக்கும் தளத்திற்கு கடைசி பயணத்தை தொடங்குகிறது 'விராட்'.
பிரிட்டனிலிருந்து வாங்கிய ஒரே போர் கப்பலான ஐஎன்எஸ் 'விராட்' நாளை மறுநாளுடன் (21/09/2020) ஓய்வு பெறுகிறது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட விராட்டைஉணவகமாக மாற்ற முடிவு செய்த பின் கப்பலை உடைக்க முடிவெடுக்கப்பட்டது.