கடந்த மார்ச் 23 ஆம் தேதி பாகிஸ்தான் தேசிய தினம் அந்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு இந்தியா சார்பில் பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதில், தீவிரவாதம் வன்முறை இல்லாத சூழலில், ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக தெற்காசிய மக்கள் இணைந்து பணிபுரிய வேண்டிய தருணம் இது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியம். எனவே அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பேச்சுவார்ததைக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த போக்கு கூடிய சீக்கிரம் இந்தியா பாகிஸ்தான் உறவில் முன்னேற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.