Advertisment

சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

cbse

சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு 2 முறை நடத்தும் திட்டத்திற்கான ஒப்புதல்  வழங்கப்பட்டுள்ளது. அதாவது 10ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் கட்டம், 2ஆம் கட்டம் என்ற அடிப்படையில் பொதுத் தேர்வை எழுதுவதற்கான நடைமுறைக்கான ஒப்புதலை மத்திய அரசு சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு வழங்கியிருந்தது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை சிபிஎஸ்சி வழங்கியுள்ளது.  

Advertisment

இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்சி அதிகாரி சாணியம் பரத்வாஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். முதல் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்து முடிவுகள் வெளியாகும். அதேபோல் 2ஆம் கட்ட தேர்வுகள் ஜூன் மாதத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் அடங்கிய அனைத்து விதிகளும்  வகுக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisment


முதற்கட்ட தேர்வில் பங்கேற்க இயலாத மாணவர்கள் 2வது கட்ட தேர்வில் பங்கேற்பதற்கான  வாய்ப்பு வழங்கப்படும் என்ற  தகவலையும் சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வின் மதிப்பெண்கள் ஒருவேளை குறைவாக இருப்பின் மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10th public exam 10th board exam cbse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe