இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனாபரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றுமும்பை, கொல்கத்தாமற்றும் நொய்டாவில் அதிக திறன் கொண்டகரோனா பரிசோதனை ஆய்வகங்கள் திறக்கப்பட்டது. இந்த ஆய்வகங்கள் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் கரோனாமாதிரிகளைப்பரிசோதிக்க முடியும். பிரதமர் மோடி அதிகத் திறன் கொண்டஇந்தக் கரோனாபரிசோதனை ஆய்வகங்களைக்காணொளி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால்மற்ற நாடுகளைவிட இந்தியாவில்கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாசிகிச்சைக்காக 11 லட்சம் படுக்கைகள் உள்ளன. தினமும் 3 லட்சம் என்-95 முகக் கவசங்களை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. கவச உடை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது என்றார்.