
உலகை அச்சுறுத்திவரும் கரோனாதொற்றுக்குமருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி, பாபாராம்தேவின்பதஞ்சலிநிறுவனம் 'கொரோனில்' என்ற மருந்தைஅறிமுகம் செய்தது. இது கரோனாவைகுணமாக்கும் எனச் செய்யப்பட்ட விளம்பரம் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், இந்த மருந்து கரோனாவைகுணமாக்கும் என்பதற்கான சமர்ப்பிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்கள் குறித்தும் சர்ச்சைகிளம்பியது. இதனையடுத்து மத்திய ஆயுஷ்அமைச்சகம், இந்த மருந்து கரோனாவைகுணமாக்கும் எனக் கூறி விளம்பரம் செய்யத் தடைவிதித்தது.
அதன்பிறகு இந்த மருந்தைகொரோனில்கிட்என்ற பெயரில்,பதஞ்சலிநிறுவனம் கடந்த 19 ஆம் தேதி மறு அறிமுகம் செய்தது. இதில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரிமற்றும் ஹர்ஷவர்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.அந்த நிகழ்வில், இந்த கரோனில் கிட் தொடர்பாக ஆய்வுக்கட்டுரை வெளியிடஉலக சுகாதாரநிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது எனக்கூறியது பதஞ்சலி. ஆனால், இதனைஉலக சுகாதாரநிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தநிலையில், இந்த மருந்து அறிமுக விழாவில், கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கம்வெளியிட்டுள்ளஅறிக்கையில்இந்திய மருத்துவ கவுன்சிலின் நெறிமுறையின்படி, எந்தவொரு மருத்துவரும் எந்த மருந்தையும் ஊக்குவிக்க முடியாது. இருப்பினும், ஒரு நவீனமருத்துவரான சுகாதார அமைச்சர் இந்த மருந்தை ஊக்குவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது எனக் கூறியுள்ளது.
மேலும்நாட்டின் சுகாதார அமைச்சராக இருந்துகொண்டு, இதுபோன்ற பொய்யான, புனையப்பட்ட, அறிவியலற்ற தயாரிப்பை முழு நாட்டு மக்களுக்கும் வெளியிடுவது எந்தளவிற்கு நியாயமானது?இந்த கரோனாவுக்கு எதிரானமருந்து எனச் சொல்லப்படும் இந்த மருந்தின்சோதனைகாலம் எவ்வளவுஎனவும்இந்தியமருத்துவ சங்கம்கேள்வியெழுப்பியுள்ளது. இந்திய மருத்துவ சங்கம், இதுதொடர்பாக விளக்கமளிக்கக் கோரி இந்தியமருத்துவக் கழகத்திற்கும் கடிதம் எழுதப்போவதாகக்கூறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)