ADVERTISEMENT

முகநூலில் பதிவிட்டு பாஜக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

11:22 PM Jan 27, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

முகநூலில் தனது மகன்களின் நிலை குறித்து பதிவிட்ட பின் பாஜக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் மிஸ்ரா. பாஜக கவுன்சிலரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரு மகன்களுக்கும் தசை நார் சிதைவு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மகன்களின் நோய் குறித்து தம்பதிகள் இருவரும் வருத்தத்தில் இருந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல மகன்கள் இருவரும் நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டதால் நான்கு பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று மாலை கவுன்சிலர் சஞ்சீவ் மிஸ்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் “எதிரிகளுக்கு கூட என் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோயை கடவுள் கொடுக்கக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவைப் பார்த்த சஞ்ஜீவ் மிஸ்ராவின் நண்பர்கள் அவரைத் தொடர்பு கொண்டு பேச முற்பட்டனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் அவரது வீட்டிற்குச் சென்றனர். வீட்டின் கதவு உள்ளே தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சஞ்ஜய் மிஸ்ரா அவரது மனைவி இரு மகன்கள் உட்பட நான்கு பேரும் தரையில் மயங்கி கிடந்துள்ளனர்.

உடனடியாக அவர்களை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் நான்கு பேரும் இறந்து விட்டதாகக் கூறினர். இது குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக சஞ்சீவ் மிஸ்ரா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT