அசாம் மாநிலத்தின் கோலாகாட் பகுதியில் கள்ளசாராயம் குடித்து 69 பேர் பலியாகியுள்ளனர். கோலாகாட் பகுதியில் உள்ள ஒரு கடையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் அறுந்துயுள்ளனர். அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதுவரை 69 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் தற்போது இப்படி நடந்துள்ள நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் பலி; மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு...
Advertisment