Advertisment

வருடத்திற்கு ஒரு கணவன்... வசமாக சிக்கிய இளம்பெண்!

hjk

Advertisment

இளைஞர்களை பலரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட மாநிலத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் அம்மாநிலத்தில் உள்ள ராஜ்தன்வாரில் வசிக்கும் நிலாய் குமார் என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆகி ஒரு ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் அவரை ஏமாற்றி 1 கோடி ரூபாய் சொத்தை பிடிங்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு மீண்டும் தான் திருமணம் ஆகாத பெண் என திருமண இணையதளத்தில் பதிவு செய்து குஜராத்தை சேர்ந்த அமித் மோடி என்பரை திருமணம் செய்துள்ளார். அவரிடம் இருந்து 40 லட்ச ரூபாயை பறித்துக்கொண்டு சென்றுள்ளார். தற்போது வெளிநாட்டில் வசிக்கும் புனைவை சேர்ந்த பவார் என்பவரை அவர் திருமணம் செய்ய உள்ளதால் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வாங்க விண்ணப்பித்துள்ளார். அப்போது பவாரின் தாயார் அவர் திருமணம் ஆனவர் என்பதை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே அந்த பெண்ணை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe