/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/e3_4.jpg)
நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மீது முறைகேடு புகார் எழுந்துள்ளதாக கூறி சில மாதங்களுக்கு முன்பு அவரை போலிசார் கைது டெல்லி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இன்று காலை அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது.
சென்னை, மும்பையில் தலா மூன்று இடங்களிலும், கர்நாடக, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடமும் என மொத்தம்9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம் , "ஒரு வழக்கு தொடர்பாக எத்தனை முறைதான் சோதனை நடத்துவார்கள் என்று தெரியவில்லை, எத்தனை முறை சோதனை நடந்தது என்று எனக்கே நினைவில்லை" என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்டெல் மேக்சிஸ் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புதியதாக புகார் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்தின் மூலம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக பணம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.50 லட்சம் பெற்றுக்கொண்டு விசாக்கள் வழங்கியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இதே தேதியில் சிபிஐ கார்த்தி சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் ஐந்து வருடத்திற்கு பிறகு மீண்டும் சிபிஐ இதே தேதியில் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)