Advertisment

பத்மவிபூஷன் விருது பெற்றார் இளையராஜா!

ilayaraja

Advertisment

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 84 பேருக்கு 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.

Advertisment

இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லி்யில் இன்று நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ராம்நாத் கோவிந்த்.

Award got ilayaraja Padma Vibhushan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe