Advertisment

மாநிலங்களவை உறுப்பினராகிறார் இளையராஜா!

Ilayaraja becomes a Rajya Sabha member!

Advertisment

மாநிலங்களவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அண்மையில்பிரதமர் மோடி குறித்த புத்தகத்தில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. பல்வேறு தரப்பிலிருந்து இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்இந்த தகவலை பிரதமர் மோடி அவரது டிவிட்டர்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர்பதிவில் 'தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து சாதனைகளை செய்தவர். அவருக்கு என் வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.

Advertisment

modi Delhi Parliament ilayaraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe