Advertisment

தனியார் ஹோட்டல் அறையில் அழுகிய நிலையில் ஐஐடி மாணவர் உடல்!! போலீசார் விசாரணை!!

IIT

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

மும்பையில் திங்களன்று ஜோகேஷ்வரி பகுதியில் உள்ளஒரு ஹோட்டல் அறையில் ஒரு 22 வயது சிதைந்த கல்லூரி மாணவன்உடல் கண்டுபிடிக்கப்பட்டது

Advertisment

இறந்தவர் போவாயில் உள்ள ஐஐடியில் படிக்கும் மாணவர் என்பதும்,அவர் பெயர்ஜெய்தீப் ஸ்வைன் என்பதும் போலீசார் விசாரணையில்கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்வைன் ஐ.ஐ.டி.யின் கணினி விஞ்ஞான துறையின் தொழில்நுட்பத்தில் முதுகலை படிப்பு பயின்று வருகிறார்.இந்த ஆண்டு ஜூலையில் ஐஐடியில்சேர்ந்தார். அவரது தந்தை இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்தில் ஒரு போர்ட்டராக பணியாற்றுகிறார், அவருடைய சகோதரி சென்னையில் உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஜோகேஷ்வரியில் உள்ளஅந்த தனியார்ஹோட்டலில் ஸ்வைன் அறையெடுத்துள்ளார்.ஹோட்டல் ஊழியர் அவரது அறைக்குகடைசியாகசெப்டம்பர் 1 அன்று ரூமை பராமரிக்க சென்றுள்ளார். அதன் பின் அவர் ஹோட்டல் ஊழியர்களை கூப்பிடவில்லை. செப்டம்பர் 3 அன்று,ஏழாவது மாடியில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துறுநாற்றம் வர அருகிலுள்ள அம்போலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று அறை கதவை உடைத்து பார்த்ததில் அவர் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய போலிஸார்பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரதுஉடலுக்கு அருகில் சில மாத்திரைகள் காணப்பட்டனஆனால்தற்கொலைகானகடிதம்எதுவும்கண்டுபிடிக்கப்படவில்லை.

''நாங்கள் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம், இதுகொலையா அல்லது தற்கொலையா என விரைவில்கண்டுபிடிப்போம்'' என போலீசார் தெரிவித்துள்ளனர்.

hotel iit Mumbai murder student sucide
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe