Skip to main content

புன்னகை புரியும்... பல மொழிகள் பேசும்! - ஐஐடி ஆசிரியரின் 'ஷாலு' ரோபோட்!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

SHALU ROBOT

 

ஐ.ஐ.டி. பாம்பேயில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் கணினி அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் தினேஷ் படேல். இவர் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் அட்டை, மரம், அலுமினியம் உள்ளிட்டவற்றை கொண்டு ஆங்கிலம் உள்ளிட்ட 38 வெளிநாட்டு மொழிகளையும், தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளையும் பேசும் வகையில் ரோபோ ஒன்றை தயாரித்துள்ளார்.

 

இந்த ரோபாவிற்கு 'ஷாலு' எனப் பெயரிட்டுள்ள தினேஷ் படேல், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்று ஆண்டுகள் செலவுசெய்து இந்த ரோபோவை உருவாகியுள்ளதாகக் கூறிகிறார். இந்த ரோபாவால், மனப்பாடம் செய்யமுடியும், கணிதம் பொது அறிவு கேள்விகளுக்குப் பதில் கூற முடியும் எனத் தெரிவித்துள்ள தினேஷ் படேல், இந்த ரோபோவை பள்ளிகளில் ஆசிரியராகவும், அலுவலகங்களில் வரவேற்பாளராகவும் பயன்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார்.

 

மேலும் தினேஷ் படேல், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா, மேக்-இன்-இந்தியா உள்ளிட்டவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த ரோபோவை உருவாக்கியுள்ளதாகவும், இந்த ரோபோவால் புன்னகை மற்றும் கோபம் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் எனவும் தினேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த ரோபோட்டிற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

பூமிக்கு வந்த புதிய மனிதியை வரவேற்போம்!!! 

 

 

சார்ந்த செய்திகள்