iifl மற்றும் ஹுருன் நிறுவனம் ஒன்றிணைந்து 2019 ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Advertisment

iifl and hurun india top 10 richest indians list

இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலின்படி இந்தியாவில் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை 953 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் என்ற இந்த பட்டியலில் ரூ.3.8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

Advertisment

அவருக்கு அடுத்து ரூ.1.8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹிந்துஜா குழும தலைவரான எஸ்.பி.ஹிந்துஜா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ரூ.1.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் விப்ரோ குழும தலைவர் அசிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்திலும், ரூ.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் லட்சுமி மிட்டல் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் ரூ.94,000 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கௌதம் அதானி ஐந்தாம் இடத்தில் உள்ளார்.