IG inspection the sub  inspector failed to load fire rifle

Advertisment

உ.பி.யில் ஐஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியில்தோட்டாவை எப்படிப் பொருத்துவது எனத்தெரியாமல் திக்குமுக்காடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசமாநிலத்தில் சந்த் கபீர் நகர் மாவட்டம் கிலாபாத் காவல் நிலையத்தில் ஐஜிபரத்வாஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுஅங்குள்ள காவலர்களிடம் துப்பாக்கியை எப்படிப் பிடிப்பது? எப்படிச் சுடுவது எனச் சோதனை செய்தார்.இதில்பல காவலர்கள்சரியாகத்துப்பாக்கியால்சுடத் தெரியாமல்திணறினர். அதிலும் உதவி ஆய்வாளர் ஒருவரிடம் துப்பாக்கியில் எப்படிதோட்டாவைப் பொருத்த வேண்டும் என்று கூறி,அதைச் செய்துகாட்டும்படிகூறினார்.

அப்போது துப்பாக்கியில் எப்படி தோட்டாவைப் பொருத்துவது எனத்தெரியாமல் உதவி ஆய்வாளர் தடுமாறினார். மேலும், அந்த உதவி ஆய்வாளர் தோட்டாவெளியேறும் வழியில் தோட்டாவைப் பொருத்த முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஜி பரத்வாஜ், இது குறித்து தொடர்ந்து பயிற்சி எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment