ADVERTISEMENT

சர்ச்சையில் மாட்டிவிட வேண்டாம்... என்னை கவுரவிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்... பிரதமர் வேண்டுகோள்  

05:36 PM Apr 08, 2020 | kalaimohan

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் 5000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

ADVERTISEMENT


இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்த ஆலோசனைகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். அதேபோல் ஊரடங்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை கரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒலி எழுப்ப வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

ADVERTISEMENT



அதேபோல் அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியை கௌரவிக்க அனைவரும் ஐந்து நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என தகவல் பரவியதால், தன்னை யாரும் சர்ச்சையில் மாட்டிவிட வேண்டாம் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

என்னை கவுரவிக்க விரும்பினால் ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏழை குடும்பத்திற்கு உதவுவதைவிட, எனக்கு நீங்கள் சிறந்த மரியாதையை அளிக்க முடியாது எனவும் அந்த ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT