
உத்திரப் பிரதேசம், பல்லியா கிராமத்திலுள்ள மக்கள் அரசியல் மீதான நம்பிக்கையிழந்து, அரசியல்வாதிகள் உள்ளே வரக்கூடது என்று புதுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த கிராமத்தில் சரியான போக்குவரத்திற்கு சரியான சாலை அமைத்துதரவே இல்லை. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி எங்களது கிராமம் இருக்கிறது என்று அக்கிராமத்தின் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சாலை அமைத்தால்தான் உங்களுக்கு ஓட்டு, அரசியல்வாதிகள் உள்ளே வரவேண்டாம் என்று பலகைகள் வைத்துள்ளனர். இதுகுறித்து கிராமத் தலைவர் தெரிவிக்கையில், நல்ல சாலைகள் அமைத்து தரவேண்டும் என்று உயர் அதிகாரிகள் அனைவரிடம் தெரிவித்துவிட்டோம். இருந்தாலும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு என்று கொடுக்கப்படும் நிதியை செலவு செய்யாமல் ஊழல் செய்கின்றனர் என்று அதிகாரிகளை குற்றம் சாட்டியுள்ளார்.